Friday, September 17, 2010

மாலையில் யாரோ - சத்ரியன்













பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : இளையராஜா


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)


Tuesday, September 7, 2010

எனக்குப் பிடித்த பாடல் - ஜூலி கணபதி









பாடியவர் : விஜய் யேசுதாஸ்  & ஸ்ரேயா க்ஹோஷால்
பாடல் :
இசை : இளையராஜா


எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?


பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.


வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்


எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில்

















பாடியவர் : ஹரிஹரன் & சாதனா சர்கம்
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா


என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே,எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?

கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே
ராகம் தொடும் நேரம் , வனம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே
நெஞ்சுக்குள் காதல் சுழல் .. ஒ ..
மூச்சுக்குள் புல்லாங்குழல்
வெறும் கற்று இசையாக மாறுகின்ற மாயங்களை ....

என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?


அந்திப் பிறை வந்து மஞ்சள் வேனில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே
பூவின் மடி தூங்கி , தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே
தீராதா தேடல் ஒன்று ... ஒ ..
தேடட்டும் நெஞ்சம் இன்று
சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும் இன்பத்துன்பம் தன்னை...

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே , எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்த்தை தேடுவதோ ?

Friday, September 3, 2010

பிஞ்சு தென்றலே - மஜ்னு













பாடியவர் : M.G. ஸ்ரீகுமார் & சந்தியா
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

சாமிகிட்டசொல்லி - தாஸ்












பாடியவர் : ஹரிஹரன் & ஸ்ரேயா க்ஹோஷால்
பாடல் :
இசை : யுவன் சங்கர் ராஜா


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…


தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளிஎந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

சுந்தரி கண்ணால் - தளபதி












பாடியவர் : பாலசுப்ரமணியம் & ஜானகி
பாடல் :
இசை : இளையராஜா


சுந்தரி கண்ணால் ஒரு சேதி......
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...
என்னையே தந்தேன் உனக்காக...
ஜென்மமே கொண்டேன் அதற்காக...
நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்...
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா....?
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா...?
வாள் பிடித்து நின்றால் கூட...நெஞ்சில் உந்தன் ஊர்வலம்.....
போர்க்களத்தில் சாய்ந்ததால் கூட...ஜீவன் உன்னை சேர்ந்த்திடும்....

தேன்நிலவு நான் வாட.... ஏனிந்த சோதனை??
வான்நிலவை நீ கேளு..... கூறும் என் வேதனை!!!
எனைத்தான் அன்பே மறந்தாயோ..????
மறப்பேன் என்றே நினைத்தாயோ.....?

என்னையே தந்தேன் உனக்காக....
ஜென்மமே கொண்டேன் அதற்காக...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...

நான் உன்னை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே.............

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக.......

சோலையிலும் முட்கள் தோன்றும்.. நானும் நீயும் நீங்கினால்....
பாலையிலும் பூக்கள் பூக்கும்...நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்...
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்...

கோடி சுகம் வராதோ நீயெனை தீண்டினால்.......
காயங்களும் ஆறதோ நீஏதிர் தோன்றினால்....
உடனே வந்தால் உயிர் வாழும்........
வருவேன் அந்நாள் வரக் கூடும்.....

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!