Saturday, March 19, 2011

சொன்னாலும் கேட்பதில்லை - காதல் வைரஸ்


 
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்  & ஹரிணி ,

பாடல் : வாலி


சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும் ?
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உன்னை தவிர எனக்கு
விடியல் இருக்கோ கிழக்கு ?
உலகினில் உள்ளதோ உயிரே ?

சூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு
கிழக்குக்கு நீதான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் ... (தனனம் )
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது (தனனம் )

விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதியென நான் நடந்தேன்
நனை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்த நீரில்
கொட்டி வைத்து பாரு
வந்துவிடும் மேலே வஞ்சி கொடியே (சொன்னாலும்

சின்னஞ் சிறுசுக மனசுக்குள் - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்





இசை : யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்கள் : ஜாவேத்  அலி  / பில  ஷிண்டே
பாடலாசிரியர்: வாலி




தா  ந  ந  ந ...
ஓ   ஹோ 
தா  ந  ந  தன்னனன
தன்னனன . ...
ஓ  ஹோ ...
சின்னஞ் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா 
புத்தம்  புதுசுசாக  நினைபுக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க 
பொதுவாக 
பருவம்  ஒரு  பூந்தோட்டம்  ஆச்சு 
என்  காலு 
வளைக்கும்  ஒரு  நீர் ஓட்டம்   ஆச்சு 
விலகாத 
உறவு  ஒரு  கொண்டாட்டம்  ஆச்சு 
புத்தம்  புதுசுசாக  நினைபுக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க

சின்னஞ் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா


சிடுமூஞ்சி  நீதான்  என்று 
சொல்லி  சொல்லி 
கேலி  கேலி 
சின்ன  சின்ன 
சேட்டை  செய்தேன 
சந்து  போனதில்  நீதான்  வந்த 
ஒத்திபோக 
ஒத்துக்காம 
சண்டியர்  போல்  வம்பு 
செய்தேன் நான்.. ஓஹ்ஹ ஓ...   ஓஹ்ஹ ஓ
ஓ  அரை  திரையார்  போட்ட  பையா 
நீ  படாத  நாவனி 
விரல்  சூப்பி  நின்ன  புள்ள 
நீ  போட்டாச்சு  தாவணி 
விளையாட்ட 
இருந்த  முகம்  ஏன்  வெளிரிபோச்சு?? 
வேறென்ன
பூப்பு  அடைஞ்ச  வெவரம்  தெரிஞ்சாச்சு 
குறும்பா தான்
திரிஞ்ச  பொண்ணு  ஏன்  குமரி  ஆச்சு ?
வேறென்ன 
உடம்பு உனக்கு  வழங்க  முடிவாச்சு.. 

aah...

மன்னாலதான்  வீடு  கட்டி 
நானும்  நீயும் 
வாழுரப்போ 
மீன்  கொழம்பு  ஆக்கி  போட்ட  நீ.. 
ஓ   ஹோ
கமருகட்டு  கடலை 
மிட்டாய்  
வாங்கினாக்க 
வாயில்  வெச்சு 
காக்க  கடி  கடிச்சு 
தந்தாய் நீ 
ஓ   ஹோ  கருவாட்ட  போல 
தீயில  என்  நெஞ்ச  வாட்டின 
அங்கால  அம்மன் 
கோயிலில் 
கண்  சாட  காட்டின 
அடி  ஆத்தி 
மனசுக்குள்ள  பூ  வேச்சதாறு 
வேறாரு 
ஆடி  அசையும்  அழகு  மணி  தேறு 
அடி  ஆத்தி 
நெனபுக்குள்ள  பொய்  நின்னதாறு 
நெஞ்சார 
கூச்சம்  விடத்தான் 
ஈச்ச  மாற  பூவாய்  


சின்னன் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா 
புத்தம்  புதுசுக  நேசப்புக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க

Wednesday, March 9, 2011

நினைத்து நினைத்து - 7 G ரெயின்போ காலனி



இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: 

பாடியவர்கள் : கே  கே



நினைத்து நினைத்து பார்த்தேன் 
நெருங்கி விலகி நடந்தேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ???
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்