Wednesday, February 2, 2011

கண்ணே நீ போகும் - தாளம்



இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்


************************


கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்துதான் முடியும்

காதலியே………

கலை மானே…
கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே…
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?
சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ ?

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததா யார் சொன்னது – என்
உயிர் உள்ள புள்ளிதான் நீ வாழ்வது..

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா…
காதலியே…

No comments:

Post a Comment