Monday, December 13, 2010

கடவுள் தந்த அழகிய - மாயாவி







பாடியவர் : S.P.சரண் & கல்பனா
பாடல்  :
இசை :
தேவி ஸ்ரீ பிரசாத்




கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….


கருணை பொங்கும்உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..


அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. o..ugh.. ohh.


எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றுவிடுவூம்
விடைபெறும்நேரம்  வரும் போதும் ……..  
சிரிப்பினில் …நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமல் வாழுமே


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….


நாம் எல்லாம் சுவாசமே தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்மேகங்கள் இடங்களே பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இழையுதுரும் ….


வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும் ……
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
கேளடி … ….


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள்






பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
பாடல்  :
இசை : இளையராஜா



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

(கல்யாண மாலை)

Friday, December 10, 2010

அன்பே வா அருகிலே - கிளிபேச்சு கேட்கவா..




 

பாடியவர்கள்  - K.J. ஜேசுதாஸ்
பாடல் -
இசை - இளையராஜா   

 
அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....

உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை
நீ  தானே வேண்டும்   என்று   ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின்  மீது  தூங்கினேன்...

இதனை  நாள்  வாய்  மொழிந்த ....
சித்திரமே  இப்பொழுது  மௌனம்  ஏன்  தானோ ?
மின்னல்  என  மின்னி  விட்டு
கண்  மறைவாய்  சென்று  விட்ட மாயம்  நீ  தானோ ?
உன்னால்  வந்த  காதல் உன்னால்  தானே  வாழும்
என்னை  நீங்கி  போனால் ...உன்னை  சேரும்  பாவம் ....
எனக்கொரு  அடைக்கலம்  ...
வழங்குமோ உன்  இதயமே.. 

அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....
உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை

உள்ளத்துக்குள்  உள்ளிருந்து  மெல்ல  மெல்ல  கொல்லுவது
காதல்  நோய்  தானோ.....
வைகை  என பொய்கை  என
மையலிலே  எண்ணியது கானல்  நீர்  தானோ
என்னை  நீயும்ம்  கூட எண்ண  கோலம்  போட்டேன் .
மீண்டும்ம்  கோலம்  போட உன்னை  தானே  கேட்பேன்..
எனக்கொரு  அடைக்கலம்  ...
வழங்குமோ உன்  இதயமே..  

அன்பே  வா  அருகிலே ....
என்  வாசல்  வழியிலே ....

உல்லாச  மாளிகை மாளிகை ...
எங்கே  என்  தேவதை தேவதை
நீ  தானே வேண்டும்   என்று   ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின்  மீது  தூங்கினேன்...


http://www.youtube.com/watch?v=CP0xkJPrykQ&feature=related

Monday, December 6, 2010

நீ இன்றி நானும் - வாரணம் ஆயிரம்




பாடியவர் : S.P.B.சரண்
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை 

வழி எங்கும் உந்தன் முகம் தான் 
வலி கூட இங்கே சுகம் தான்  

தொடுவானம் சிவந்து போகும் 
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே  

இனி உன்னை பிரிய மாட்டேன் 
துளி தூரம் நகர மாட்டேன் 
முகம் பார்க்க தவிக்கிறேன்  
என் இனிய பூங்காற்றே  

ஓஹ் ஷாந்தி ஷாந்தி ஓஹ் ஷாந்தி 
என் உயிரை உயிரை நீ ஏந்தி  
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி ? 
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி  

நீ இன்றி நானும் இல்லை  
ஏன் காதல் பொய்யும் இல்லை  
உன்னை காணும் நேரம் வருமா ? 
இரு கண்கள் மோட்சம் பெரும ?  

விரலோடு விழியும் வாடும் 
விரைகின்ற காலம் நோகும் 
இருந்தாலும் வருகிறேன் 
உன் மடியில் நான் தூங்க  
எனை வந்து உரசும் காற்றே  
அவளோடு கனவில் நேற்றே  
கைகோர்த்து நெருங்கினேன்  
கண் அடித்து நீ ஏங்க  

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி 
என் உயிரை உயிரை நீ ஏந்தி 
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி 
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

கண்கள் இரண்டால் - சுப்பிரமணியபுரம்





படம்: சுப்பிரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

பல்லவி
========

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
       (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
        பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
        கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
        ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
        ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
        இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
=========

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
        பொழுதுகள் உன்னோடு கழியுமா
        தொடவும் கூடாத படவும் கூடாத‌
        இடைவெளி அப்போது குறையுமா
பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
         மறுபுறம் நாணமும் தடுக்குதே
         இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம் 2
=========

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
         மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
         உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
         கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:  உனையன்றி வேறொரு நினைவில்லை
         இனி இந்த ஊனுயிர் எனதில்லை
         தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
          ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
          ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
         இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
         பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
         நகர்வேனே மாற்றி
பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
         என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌
ஆ:  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

என்று உன்னை - இதயமே இதயமே




என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்று எந்தன் உயிரை கண்டேனே
காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே
தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரத்தம் கேட்காது
கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பாரம் தீர்ந்தே போகாது
காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி

கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்
என் நெஞ்சை விட்டு உன் நினைவு போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே

தேகம் விட்டு ரத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன் 


http://www.youtube.com/watch?v=Kr6swEJF7fI

http://www.youtube.com/watch?v=k-dZW0ZFGPY&feature=related

நினைத்து நினைத்து - 7/G ரெயின்போ காலனி











நினைத்து நினைத்து பார்த்தேன் 
நெருங்கி விலகி நடந்தேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....

Wednesday, November 24, 2010

உன்னை விட இந்த - விருமாண்டி




பாடியவர் : ஸ்ரேயா ஹோசல் & கமலாஹாசன்
பாடல் : 

இசை :  இளையராஜா

 




உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை 
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
 
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை எவளுமில்லை
உன்னை விட ..... என்னை விட ........

அள்ளி கொடிய காத்து அசைக்குது
அசையும் கோலத்துக் உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுத்தி சேருது
என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காண கன வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ....
உன்னை விட .................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிக்கிற நமக்கு அது மூடு பனி - உன்னை விட ......

உன் கூட நான்
கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய ? - 100 ஜென்மம் உன் கூட... போதுமா ?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வாரம் ஏதும் கேட்போமா ?
சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனா போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட ...)

வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

(உன்னை விட ....)

Friday, November 19, 2010

அனல் மேலே பனி துளி - வாரணம் ஆயிரம்




பாடியவர் : சுதா ரகுநாதன் 
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 



அனல் மேலே பனி துளி 
அலைபாயும் ஒரு கிளி  
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி 
எதற்காக தடை இனி
அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி 
இமை இரண்டும் தனி தனி
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி


எந்த காற்றின் அளாவலில் மலரிதல்கள் விரிந்திடுமோ?
எந்தன் தேவ வினாடியில் மனஅறைகள் திறந்திடுமோ?
ஒரு  சிறுவலி  இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே 
உனது  இரு  விழி  தடவியதால்  அமிழ்ந்துவிட்டேன்  மயக்கத்திலே 

உதிரட்டுமே உடலின்  திரை அது  தான்  இனி  நிலவின்  கரை கரை

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி 
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி

சந்திதோமே கனாக்களில் சில முறையா பல முறையா 
அந்தி மாலையில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா?
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே 
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே 
உனதலைகள் என்னை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திடுமா

அனல் மேலே பனி துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி 
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி 
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி

Friday, September 17, 2010

மாலையில் யாரோ - சத்ரியன்













பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : இளையராஜா


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)


Tuesday, September 7, 2010

எனக்குப் பிடித்த பாடல் - ஜூலி கணபதி









பாடியவர் : விஜய் யேசுதாஸ்  & ஸ்ரேயா க்ஹோஷால்
பாடல் :
இசை : இளையராஜா


எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?


பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.


வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்


எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில்

















பாடியவர் : ஹரிஹரன் & சாதனா சர்கம்
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா


என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே,எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?

கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே
ராகம் தொடும் நேரம் , வனம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே
நெஞ்சுக்குள் காதல் சுழல் .. ஒ ..
மூச்சுக்குள் புல்லாங்குழல்
வெறும் கற்று இசையாக மாறுகின்ற மாயங்களை ....

என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?


அந்திப் பிறை வந்து மஞ்சள் வேனில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே
பூவின் மடி தூங்கி , தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே
தீராதா தேடல் ஒன்று ... ஒ ..
தேடட்டும் நெஞ்சம் இன்று
சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும் இன்பத்துன்பம் தன்னை...

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே , எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்த்தை தேடுவதோ ?

Friday, September 3, 2010

பிஞ்சு தென்றலே - மஜ்னு













பாடியவர் : M.G. ஸ்ரீகுமார் & சந்தியா
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

சாமிகிட்டசொல்லி - தாஸ்












பாடியவர் : ஹரிஹரன் & ஸ்ரேயா க்ஹோஷால்
பாடல் :
இசை : யுவன் சங்கர் ராஜா


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…


தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே…

மனசுக்குள்ள பொத்தி மறச்ச…இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளிஎந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…

சுந்தரி கண்ணால் - தளபதி












பாடியவர் : பாலசுப்ரமணியம் & ஜானகி
பாடல் :
இசை : இளையராஜா


சுந்தரி கண்ணால் ஒரு சேதி......
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...
என்னையே தந்தேன் உனக்காக...
ஜென்மமே கொண்டேன் அதற்காக...
நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்...
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா....?
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா...?
வாள் பிடித்து நின்றால் கூட...நெஞ்சில் உந்தன் ஊர்வலம்.....
போர்க்களத்தில் சாய்ந்ததால் கூட...ஜீவன் உன்னை சேர்ந்த்திடும்....

தேன்நிலவு நான் வாட.... ஏனிந்த சோதனை??
வான்நிலவை நீ கேளு..... கூறும் என் வேதனை!!!
எனைத்தான் அன்பே மறந்தாயோ..????
மறப்பேன் என்றே நினைத்தாயோ.....?

என்னையே தந்தேன் உனக்காக....
ஜென்மமே கொண்டேன் அதற்காக...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...

நான் உன்னை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே.............

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக.......

சோலையிலும் முட்கள் தோன்றும்.. நானும் நீயும் நீங்கினால்....
பாலையிலும் பூக்கள் பூக்கும்...நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்...
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்...

கோடி சுகம் வராதோ நீயெனை தீண்டினால்.......
காயங்களும் ஆறதோ நீஏதிர் தோன்றினால்....
உடனே வந்தால் உயிர் வாழும்........
வருவேன் அந்நாள் வரக் கூடும்.....

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

Monday, August 30, 2010

முன் பனியா - நந்தா


























பாடியவர் : S.P.B
பாடல் :
இசை : யுவன் சங்கர் ராஜா


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!

சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!

என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!