Monday, August 23, 2010

யாரும் இல்லாத - ஞானப்பழம்




















பாடியவர் : உன்னி கிருஷ்ணன் & சுஜாதா
பாடல் :
இசை : A.R.ரஹ்மான்



யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து
தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எரியும் காஷ்மீரில்
தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வர வேண்டுமே
வெடிகுண்டும் பூச்செண்டு என மாறும் நாள் ஒன்றில்
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேவ

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

1 comment:

  1. ஞானப் பழம்" ஆர்.பி.விஸ்வம் என்னும் அதுவரை வில்லத்தனங்கள் பண்ணிய கே.பாக்யராஜ் சீடரை இயக்குனராக்கியது. படமும் தோல்வி, ஆர்.பி.விஸ்வமும் வெற்றியை ருசிக்காமல் காலமாகிவிட்டார். ஞானப்பழம் திரைப்படம் தான் கே.பாக்யராஜ் இசையமைப்பில் இதுவரை இறுதியாக வந்த திரைப்படம்.
    அந்தப் படத்தில் இருந்து சுஜாதா, உன்னிகிருஷ்ணன் பாடும் "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்".

    ReplyDelete