Friday, August 27, 2010

ஸ்நேகிதனே - அலைபாயுதே



















பாடியவர் : சாதனா சர்கம்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்
என் cell எல்லாம் புகில் பூக்க செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் கலைவாய்
சத்தமின்றி துயில்வாய்

ஐவிரல் இடுக்கில்
olive எண்ணை பூசி
சேவைகள் செய்ய வேண்டும்
நீ அழும் போது
நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உன்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைகுட்டையில் ஒளித்து கொள்வேன்
வெளிவரும் போது
விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கி கொள்வேன்

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

No comments:

Post a Comment